Thursday, July 4, 2013

திருமண சடங்குகளும்,விளக்கமும்

Wedding Wishes
நம்முடைய இந்து சமயத்தில் திருமண நிகழ்ச்சியின் போது செய்யப்படும் சடங்குகளுக்கு சுருக்கமாக விளக்கம் அளித்துள்ளேன்...


1.நாட்கால் நடல்;
இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள்.பந்தகால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும் மரத்தை(பூவரசம் மரம்)வெட்டி நடவேண்டும்.மரத்தின் நுனியில்,முனை முறியாத மஞ்சள்,12 மாவிலைகள்,பூ மூன்றையும் இணைத்து கட்டவேண்டும்.பின்பு நட வேண்டிய குழியில் வெள்ளி நாணயம் , பூ , நவதானியம் இவற்றை போட்டு போட்டு பந்த கால் நட வேண்டும்.சாம்பிராணி காண்பித்து தேங்காய் உடைக்கவேண்டும்.பந்தகால் நட்டவுடன் மரத்தின் அடியில் பால் ஊற்றி,மஞ்சள்,குங்குமத்தை மேல் நோக்கி தடவ வேண்டும். மாவிலை , நவதானியம் , வெள்ளி நாணயம் , பூ , தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும் . பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூதங்களுக்கும் அறிவிக்கை செய்து ஆசி பெறுவது நோக்கமாகும்.

2.பொன்னுருக்குதல்;
திருமாங்கல்யம் என்பது சுமங்கலியின் சின்னம் ஆகும்,போற்றி பாதுகாக்க படவேண்டியது ஆகும்.நல்ல நாளில்,தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து உரிய நபரிடம் ( பொற்கொல்லர் ) புதிய பொன் கொடுத்து திருமாங்கல்யம் செய்யவேண்டும்.

3.கலப்பரப்பு;
மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் பரப்பி ( தரையில் விரித்து ) மணப்பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இரு வீட்டாருக்கும் வழங்குதன் மூலம் இருவீட்டாரும் கலந்து ஒன்றாகிவிட்டதற்கான அடையாள நிகழ்ச்சி ( கலம் என்பது பாத்திரம் ) ஆகும்.பாத்திரத்தில் மங்கலப்பொருட்களை ( மஞ்சள் கலவை, வெற்றிலை , பாக்கு , தெங்காய் , பழக்கள் பூச்சரம் , ) நிரப்புதல் கலப்பரப்பு ஆகும் .
4.காப்பு கட்டுதல்;
காப்பு என்பது அரண் போன்றது . மங்களகரமான சக்தி வாய்ந்த மங்கள் உரு வாய்ந்த மஞ்சள் கயிற்றை காப்பாக கட்டுவது . திருஸ்டி . மற்றும் அசுர சக்திகளால் இடையூறுகள் வராமல் தடுப்பதற்கு . காப்புக்கட்டுவதில் இருந்து மறு நாள் காப்பு அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமாஅனைத்து நிகழ்ச்சிகளையும் தடையின்றி செய்வேன் என்பதை உறுதி செய்யும் சடங்காகும் . அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெறும் வண்ணம் இடையூறு வராமல் காக்குமாறு தெய்வத்தை வேண்டிக் கட்டப்படுவது ஆகும்.

5.முளைப்பாலிகை :
நவதானியத்தின் மூலம் நவக்கிரகங்களை சாந்தி செய்வது . முளைப்பாலிகையில் இடப்படும் நவதானியங்கள் வளர்வது போல் குடும்பமும் செழித்து வளரட்டும் என்பதற்கான அடையாளச்சடங்கு . கள்ளங்கபடமற்ற குழந்தைகளின் உள்ளம் தெய்வீக பண்பின் உறைவிடம் . என்வே சிறுமியர் மூலம் இச்சடங்கு நடத்தப்படுகின்றது .

6.தாரை வார்த்தல் :
தாரை என்றால் நீர் என பொருள் . நீருக்குத் தீட்டில்லை . நீர் மந்திர நாத ஒலியின் அதிர்வை ஏற்கக்கூடியது . இப்படி தெய்வத்தன்மை வாய்ந்த நீரை இதற்கு பயன்படுத்துகின்றனர் . திருமணச் சடங்குகளில் மிகமுக்கியமானது தாரை வார்த்தல் . தாரை வார்த்தபின்பு தான் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும் உரிமையை அடைகின்றான் .
" என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கொடுக்கின்றேன் “ என மணமகளின் பெற்றோர் , தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு - மகள் ( மருமகள் ) ஆக ஏற்றுக் கொள்கின்றோம் என்பதற்கான உறுதிமொழி . எனவே தான் மாப்பிள்ளையின் தாயார் கை ஏற்றுக்கொள்ளும் விதமாக அடியில் இருக்க , அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை , மணமகனின் கை , மணப்பெண்ணின் கை , மணப்பெண்ணின் தந்தையின் கை , எல்லாவற்றிற்கும் மேலாக மணப்பெண்ணின் தாயாரின் கை . இந்தவெரிசையில் கைகளை வத்து இச்சடங்கு நடைபெறும் . உரிமையை விட்டுக்கொடுப்பதற்கு அடையாளமாக செய்யப்படும் சாஸ்திரப்பூர்வமான சடங்கு தாரை வார்த்தல் என்ப்படும் .

-ஜோதிடர் சுப்பிரமணியன்.

No comments:

Post a Comment