Tuesday, December 22, 2015

தவறாகப் பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

tamil pazhamozhigal

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தப்
பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்தப் பண்ணு...
இதாங்க சரி...

2.படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்....
இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ...........
படிச்சவன் பாட்டைக் கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான் ....

3.ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்...
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....
சூடு அல்ல சுவடு...
சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்....
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...
காலப்போக்கில்....

நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரைக் குறை கூற
உபயோகிக்கிறோம்...
மாறுவோம்... பிறரை மாற்றுவோம்...

Thursday, July 17, 2014

நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள்

brain
உடலில் உள்ள எந்த உறுப்பையும்விட அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்வது மூளைதான்.

தேவையான சத்துணவு, தேவையான அளவு கிடைக்காதபோது மூளைக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. அதனால் மூளையின் செல்கள் அழிந்துவிடுதல், ‘அல்ஸீமர்ஸ்’ என்ற ஞாபகமறதி நோய், ஞாபகச் சக்தியை - ஒருமுகக் கவனத்துடன் செயல்படும் ஆற்றலை இழப்பது, பலவீனம், குழப்பம், நோய் தாக்குதல் முதலியவை ஏற்படுகின்றன.

மூளைக்கு எப்போதும் ஞாபகசக்தி இருக்க வேண்டும். அதற்குக் கொழுப்பு, வெண்ணெய், நெய் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் கொழுப்பு தீங்கானது. மூளைக்கு உதவும் சரியான உணவைத் தேர்ந்தெடுக்க ஓர் எளிய வழி உண்டு. ஒளிரும் நிறத்தில் இருக்கும் உணவு வகைகள் மூளையின் பசியைப் போக்கும் முக்கிய உணவு வகைகளாகும். ஏனென்றால், இந்த உணவு வகைகளில் போதுமான அளவு வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை உள்ளன.

ஞாபகசக்திக்கு

ஞாபகசக்தி குறைவாக இருப்பவர்கள் ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி பழம், தக்காளி, முலாம் பழம், பேரீச்சம்பழம், காரட், அன்னாசி, காலி பிளவர், முட்டை கோஸ், பசலைக் கீரை, கொத்துமல்லி, வல்லாரை, முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, பச்சைப் பட்டாணி, பாசிப் பருப்பு, கொண்டைக் கடலை, பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ், சோயா எண்ணெய், பால், தயிர், அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகள் புதிய ரத்தச் செல்கள் உருவாகவும் மூளை சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகின்றன.

பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ் போன்றவற்றை அதிக அளவு உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நம் உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற உப்பு வகைகளைச் சமன் செய்து உடலைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படத் தண்டுக் கீரை, கொண்டைக் கடலை முதலியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால், தயிர், சத்துள்ள உணவு வகைகளால் அதிக அளவு ஆற்றல் கிடைக்கிறது. அதனால் சோம்பேறித்தனம் நீங்கிச் சுறுசுறுப்பு அதிகமாகிறது.

மூளை சுறுசுறுப்புக்கு

அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகளுடன் இரும்புச் சத்து நிறைந்துள்ள பேரீச்சம் பழம், பட்டாணி போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்வதால் கோபம், பதற்றம் போன்ற உணர்ச்சிகள் மெல்ல மெல்லக் குறைந்து நரம்பு மண்டலம் அமைதியாகி மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.

மாதமொரு முறை கோதுமை அல்வா சாப்பிடுவதாலும், இயற்கை இனிப்பு வகைகளைச் சாப்பிடுவதாலும் ஞாபகச் சக்தி அதிகரிக்கிறது. சிந்தனை தெளிவும் உண்டாகிறது.

திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, காரட், செர்ரி பழம் முதலியவை மூளை சுறுசுறுப்பாக இருக்க நல்ல உணவு வகைகளாகும். மூளையின் செயல்திறன் பாதிக்காதபடி இவை பராமரித்துப் பாதுகாக்கின்றன.

இவற்றால் நல்ல மனப்பாங்கு, எப்போதும் செயல்வேகத்துடன் இருப்பது, மனஉறுதியுடன் எதையும் எடுத்துச் செய்துமுடிப்பது ஆகிய ரசாயன விளைவுகளை இந்த உணவு வகைகள் ஏற்படுத்துகின்றன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் அறிவாற்றலும் ஆர்வமும் சிறப்பாக இருந்தது என்கிறது வர்ஜினியா பல்கலைக்கழகத்தின் மனோதத்துவப் பேராசிரியர் பால்கோல்ட் என்பவர் நடத்திய ஆய்வின் முடிவு.

வெள்ளை பூண்டு

மனத்தை அமைதிப்படுத்தித் தன்னம்பிக்கையை உணர்த்துகிறது வெள்ளை பூண்டு, மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபகச் சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் உயிர் வாழ்கின்றன. எனவே, ஞாபகசக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மீன், மீன் எண்ணெய், மீன் மாத்திரை ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது என்கிறார் ஓரிகான் உடல்நல விஞ்ஞானப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை பேராசிரியர் வில்லியம் கானர் - மூளையில் ஏற்படும் ஓட்டையைத் தையல்காரர் போல் சிறப்பாகத் தைத்து மூளையை ஒழுங்காகச் செயல்படுத்துபவை மீனும், மீன் எண்ணெயும், மீன் மாத்திரையும் என்கிறார் .

Wednesday, June 25, 2014

ராஜதந்திரம் - இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க உண்மையாகவே காந்திதான் காரணமா?

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க உண்மையாகவே காந்திதான் காரணமா?

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க
உண்மையாகவே காந்திதான் காரணமா?
இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

ஏனெனில் இந்தியாவிற்கு சுதந்திரம்
கொடுத்த போது இரண்டாம் உலக போர்
முடிந்து இரண்டு ஆண்டே ஆகி இருந்தது.

அப்போது இங்கிலாந்து
படையில்
பெரும்பாலானவை ஹிட்லரின்நாசி
படையிடம்
மோதி அழிந்து போனது.மேலும்
இந்தியாவில் இருந்த படையில் மூன்றில் ஒரு பகுதி நேதாஜியின் ராணுவத்தால்
அழிக்கப்பட்டது.

இந்தியாவை கையாள
தேவையான ராணுவ பலம்
இங்கிலாந்திடம்
இல்லை.

இந்தியாவை கட்டு படுத்த
மேலும் படைகளை அனுப்பினால் இங்கிலாந்தை இழக்க நேரிடும்.அதனால்
அவர்கள்
இந்தியாவை விட்டு வெளியேறினர் .

நேதாஜியை சமாளிக்க முடியாமல்
நாட்டை விட்டு போகிறோம்
என்று சொன்னால் அசிங்கம் என்று அகிம்சைக்காக சுதந்திரம்
என்று சொல்லி நாட்டை விட்டு போனார்கள்.

இந்திய சுதந்திர போராட்டத்திற்காக
எத்தைனையோ பேர் உயிரை இழந்தனர்
அவர்கள் மட்டும் நேதாஜியின் பின்னால்
சென்று இருந்தால் இவ்வளவு உயிர் இழப்பும் ஏற்பட்டு இருக்காது பத்து
ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு
சுதந்திரம் கிடைத்து இருக்கும்.

இந்த
மறைக்கப்பட்ட உண்மையை உரக்க
சொல்வோம்

உலகுக்கு இதை தயவு செய்து ஷேர் செய்யவும்....

Tuesday, July 16, 2013

மல்லிகை பூ

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

மல்லிகைப் பூவை


அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்...

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.

மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.

மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்சி குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம். Buy Poo Online

Thursday, July 4, 2013

சித்தர்கள் இராச்சியம்

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?

siththarkal

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100. 

{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}

மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,

100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,

93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,

87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,

80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,

73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,

66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு
கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7
வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில்
கொள்ளவேண்டும்.

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால்
முடிவேயில்லை (இது சித்தர்களால்
மட்டுமே முடியும்).

திருமண சடங்குகளும்,விளக்கமும்

Wedding Wishes
நம்முடைய இந்து சமயத்தில் திருமண நிகழ்ச்சியின் போது செய்யப்படும் சடங்குகளுக்கு சுருக்கமாக விளக்கம் அளித்துள்ளேன்...


1.நாட்கால் நடல்;
இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள்.பந்தகால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும் மரத்தை(பூவரசம் மரம்)வெட்டி நடவேண்டும்.மரத்தின் நுனியில்,முனை முறியாத மஞ்சள்,12 மாவிலைகள்,பூ மூன்றையும் இணைத்து கட்டவேண்டும்.பின்பு நட வேண்டிய குழியில் வெள்ளி நாணயம் , பூ , நவதானியம் இவற்றை போட்டு போட்டு பந்த கால் நட வேண்டும்.சாம்பிராணி காண்பித்து தேங்காய் உடைக்கவேண்டும்.பந்தகால் நட்டவுடன் மரத்தின் அடியில் பால் ஊற்றி,மஞ்சள்,குங்குமத்தை மேல் நோக்கி தடவ வேண்டும். மாவிலை , நவதானியம் , வெள்ளி நாணயம் , பூ , தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும் . பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூதங்களுக்கும் அறிவிக்கை செய்து ஆசி பெறுவது நோக்கமாகும்.

2.பொன்னுருக்குதல்;
திருமாங்கல்யம் என்பது சுமங்கலியின் சின்னம் ஆகும்,போற்றி பாதுகாக்க படவேண்டியது ஆகும்.நல்ல நாளில்,தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து உரிய நபரிடம் ( பொற்கொல்லர் ) புதிய பொன் கொடுத்து திருமாங்கல்யம் செய்யவேண்டும்.

3.கலப்பரப்பு;
மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் பரப்பி ( தரையில் விரித்து ) மணப்பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இரு வீட்டாருக்கும் வழங்குதன் மூலம் இருவீட்டாரும் கலந்து ஒன்றாகிவிட்டதற்கான அடையாள நிகழ்ச்சி ( கலம் என்பது பாத்திரம் ) ஆகும்.பாத்திரத்தில் மங்கலப்பொருட்களை ( மஞ்சள் கலவை, வெற்றிலை , பாக்கு , தெங்காய் , பழக்கள் பூச்சரம் , ) நிரப்புதல் கலப்பரப்பு ஆகும் .
4.காப்பு கட்டுதல்;
காப்பு என்பது அரண் போன்றது . மங்களகரமான சக்தி வாய்ந்த மங்கள் உரு வாய்ந்த மஞ்சள் கயிற்றை காப்பாக கட்டுவது . திருஸ்டி . மற்றும் அசுர சக்திகளால் இடையூறுகள் வராமல் தடுப்பதற்கு . காப்புக்கட்டுவதில் இருந்து மறு நாள் காப்பு அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமாஅனைத்து நிகழ்ச்சிகளையும் தடையின்றி செய்வேன் என்பதை உறுதி செய்யும் சடங்காகும் . அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெறும் வண்ணம் இடையூறு வராமல் காக்குமாறு தெய்வத்தை வேண்டிக் கட்டப்படுவது ஆகும்.

5.முளைப்பாலிகை :
நவதானியத்தின் மூலம் நவக்கிரகங்களை சாந்தி செய்வது . முளைப்பாலிகையில் இடப்படும் நவதானியங்கள் வளர்வது போல் குடும்பமும் செழித்து வளரட்டும் என்பதற்கான அடையாளச்சடங்கு . கள்ளங்கபடமற்ற குழந்தைகளின் உள்ளம் தெய்வீக பண்பின் உறைவிடம் . என்வே சிறுமியர் மூலம் இச்சடங்கு நடத்தப்படுகின்றது .

6.தாரை வார்த்தல் :
தாரை என்றால் நீர் என பொருள் . நீருக்குத் தீட்டில்லை . நீர் மந்திர நாத ஒலியின் அதிர்வை ஏற்கக்கூடியது . இப்படி தெய்வத்தன்மை வாய்ந்த நீரை இதற்கு பயன்படுத்துகின்றனர் . திருமணச் சடங்குகளில் மிகமுக்கியமானது தாரை வார்த்தல் . தாரை வார்த்தபின்பு தான் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும் உரிமையை அடைகின்றான் .
" என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கொடுக்கின்றேன் “ என மணமகளின் பெற்றோர் , தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு - மகள் ( மருமகள் ) ஆக ஏற்றுக் கொள்கின்றோம் என்பதற்கான உறுதிமொழி . எனவே தான் மாப்பிள்ளையின் தாயார் கை ஏற்றுக்கொள்ளும் விதமாக அடியில் இருக்க , அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை , மணமகனின் கை , மணப்பெண்ணின் கை , மணப்பெண்ணின் தந்தையின் கை , எல்லாவற்றிற்கும் மேலாக மணப்பெண்ணின் தாயாரின் கை . இந்தவெரிசையில் கைகளை வத்து இச்சடங்கு நடைபெறும் . உரிமையை விட்டுக்கொடுப்பதற்கு அடையாளமாக செய்யப்படும் சாஸ்திரப்பூர்வமான சடங்கு தாரை வார்த்தல் என்ப்படும் .

-ஜோதிடர் சுப்பிரமணியன்.

Wednesday, May 8, 2013

சென்னைக்கு காந்தி


ஒரு தடவை சென்னை திருவல்லிக்கேணிக்கு வந்திருந்தாராம் காந்தி.

mahatma gandhi pictures

மீட்டிங்கில் பேசிய அவரது பேச்சு முழுக்க ஆங்கிலத்தில் இருந்திருக்கிறது .
அதைக் கேள்விப்பட்ட பாரதி , காந்திஜிக்கு உடனே ஒரு
கடிதம் எழுதினார். உங்களூடைய மேடைப்பேச்சு உங்கள் தாய்மொழியான குஜராத்தியில் அமைந்திருக்கலாம் . இல்லையென்றால் இந்தியாவின் ஏதாவது ஒரு மோழியில் அமைந்திருக்கலாம் . ஆனால் அதையெல்லாம் விட்டுட்டு ,நாம் யாரை இந்த நாட்டைவிட்டுத் துரத்த வேண்டுமென்று விரும்புகிறோமோ அவர்களுடைய ( ஆங்கில) மொழியிலேயே பேசினீர்களே!! என்று கடிதத்தில் வருத்தப்பட்டிருக்கிறார்.

இதைப் படித்த காந்தி சொன்னார் ." என் தவறை நான் ஒத்துக்கொள்கிறேன் . ஆனால் உங்களுடைய கடிதமும் ஆங்கிலத்தில்தானே இருக்கிறது ?".

பாரதியும் விட்டுவிடவில்லை , ' தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி . அந்த மொழியை என் தேசத் தந்தையைத் திட்டுவதற்கு ஒரு போதும் பயன்படுத்தமாட்டேன் " என்றாராம்!!