Friday, November 30, 2012

பிரணவ மந்திரம்

 ஓம் என்பது பிரணவ மந்திரம் என்று இந்துகள் நம்பிக்கையாகும். பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்ததாக கருதுகிறார்கள். + + ம் என்பதன் இணைப்பே ஓம் ஆகும். என்பது முதல்வனான சிவனையும், என்பது உமையையும் குறிப்பதாகவும் கருதுகிறார்கள்.

OOM-OHM

ஓம் என்ற சொல்லில் , , என்ற மூன்று எழுத்துக்கள் பிணைந்திருக்கின்றன.இவைமூன்றும் மனிதனுடைய மூன்று உணர்வு நிலைகளைக் குறிப்பதாகவும், பிரம்மம் என்ற பரம்பொருளாகவே இருக்கும் நிலை இம்மூன்று நிலைகளையும்,(அதாவது விழிப்பு நிலை, கனவு நிலை, தூக்கநிலை) தாண்டிய நான்காவது நிலை என்றும், அந்நிலை ஓம் என்ற உச்சரிப்பின் முடிவில் வரும் மவுனநிலை என்றும் மாண்டூக்கிய உபநிடதம் கூறுகின்றது.
+ம் = ஓம்
வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ம்இன் உச்சரிப்பு நீண்டாதகவும் இருக்க வேண்டும்.
ஓம், ஓம், ஓம்,… என்று தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். சப்தமாக உச்சரிப்பதைக் காட்டிலும், மனதிலேயே உச்சரித்தல் நலம்.
என்று தொடங்கும்போது மனதில் தங்களுக்கு ஒரு இஷ்ட தேவதையோ அல்லது வேறு எந்த ஒரு பொருளையோ நினைக்க துவங்கிக் கொண்டால், ’ம்இல், அந்த நினைவினை தொடர வேண்டும்.

AUM-HINDU-GOD

இதோடு சேர்ந்து நாசிப்பயிற்சியும் செய்தால் மேலும் பயனுண்டு.
மூச்சை உள்ளிழுக்கும் போது, மனதில்வைத் துவக்கிக்கொண்டவாறு, தாங்கள் தேர்வு செய்த பொருளை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.
அடுத்து மூச்சை வெளி விட்டவாறும்மைத் தொடரவேண்டும். எண்ணத்திலும் நிலைநிறுத்திய பொருளை தொடர்ந்தவாறு.
இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால்,


உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஒரே நிலையில் பார்க்கக் கூடிய ஒரு பக்குவத்தையும் அவற்றின்பால் எல்லையற்ற அன்பு செலுத்தும் ஒரு மனதையும் இந்த மந்திரமானது நமக்கு அளிக்கும். இந்த உலகமே யாராலும் உணர்ந்து கொள்ளவும் முடியாத, காணவும் இயலாத ஒரு சூக்குமமான அலை வரிசையில் தான் இயங்கி வருகிறது. இந்த ஓம்காரத்தின் மூலம் பிறக்கும் அதிர்வானது உலகத்தின் அதிர்வோடு ஒரு சூக்குமமான பிணைப்பினை உருவாக்குகிறது.

கோயிலுக்குச் சென்றால் சுவாமி சந்நிதியில் முட்டி மோதாமல் கோவிலின் உள்ளேயே ஓரிடத்தில் தனியே அமர்ந்து இந்த ஓம்காரத்தை ஒலித்து வர உல்லோருக்கும் கிட்டாத ஒரு பேரின்பம் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.
நன்றி !  பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

Wednesday, November 28, 2012

விமானம் பறப்பது எப்படி?

அறிவியல் இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்
பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.

சரி... எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…

இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

how-airplane-landing

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு

A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag

ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்

டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்

விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்

விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்

சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,

அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது

எலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்.
உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக

விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்
இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்
அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்.

இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது)

இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது.

airplane-landing


விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.நன்றி ! Pyar theriyatha nanbanuku....

Monday, November 26, 2012

தஞ்சை கோயிலில் உள்ள தமிழர்களின் சாதனை

வாருங்கள் தஞ்சை கோயிலில் உள்ள தமிழர்களின் சாதனையை கண்டு வியப்போம்...

Images-for-thanjavur-kovil

படம் 1 : 18 அடி உயரமுடைய ஒரே கல்லில் உருவான துவாரபாலகர், காலை உயர்த்தி நிற்கும் அந்த துவாரபாலகருக்கு நான்கு கரங்கள் உள்ளன,அதை சுற்றி இருப்பதை சற்று கூர்ந்து கவனிப்போம், காலின் அடியில்,ஒரு சிங்கம், ஒரு பாம்பு, சாதாரணமாக பார்ப்பவர் கண்ணிற்கு இவைகள் மட்டும் தான் புலப்படும்.
சாதரணமாக பார்த்தால் தெரியாத அதன் பிரம்மாண்டத்தை, ஒரு
யானையுடன் ஒப்பிட்டு பாருங்கள் எப்படி விசுவரூபம் எடுத்து நிற்கிறது அந்த துவாரபாலகர் சிற்பம் என்பது நன்கு புலப்படும்.

துவாரபாலகர், காலின் கீழ் இருக்கும் அந்த பாம்பை சற்று உற்று நோக்குங்கள் ,பாம்பின் வாயில் என்ன,ஆஹா ஒரு யானை, பின்புறமாக யானையை முழுங்கும் பாம்பு,யானை எவ்வளவு பெரியது, அதையே முழுங்கும் பாம்பு என்றால் அது எவ்வளவு பெரியதாக இருக்கவேண்டும் !!!??அவ்வளவு பெரிய அந்த பாம்பே, அந்த துவரபாலகரின் காலில் ஒரு அரைஞான் கயிறு போல சிறிதாக தொங்கிக்கொண்டு இருக்கிறதென்றால் அந்த துவாரபாலகர் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும் ??!!!

இதனால் என்ன தான் கூற வருகிறார்கள் ? இவ்வளவு பெரிய ஆள் நானே வெளியே காவல் தான் காத்துக்கொண்டிருக்கிறேன், " உள்ளே இவற்றை எல்லாம் காட்டிலும் பெரியவர் இருக்கிறார் , சற்று அமைதியாக செல்லுங்கள் ! ' என்பதை வாயிலில் நிற்கும் இந்த சிற்பத்தில் எவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார்கள், .

வாய் பேசாத அந்த சிற்பம், தன் கையால் பேசிக் கொண்டிருப்பதையும் சற்று கவனியுங்கள், இடது புறம் மேலே இருக்கும் கை உள்ளே இருக்கும் கடவுளை நோக்கி காட்டிக்கொண்டு இருக்கின்றது (இ-1) அதற்கு கீழே இருக்கும் கை நின்றுகொண்டிருக்கும் தான் எவ்வளவு பெரியவன் என்பதை அந்த பாம்பை பார்த்து தெரிந்து கொள்ள சொல்கின்றது (இ-2), வலது புறம் மேலே இருக்கும் கை உள்ளே இருப்பவர் எப்பேர் பட்டவர் என்பதை கையை மடித்து எவ்வளவு அழகாக பூரிப்புடன் காட்டிக் கொண்டு இருக்கிறது(வ-1), கீழே இருக்கும் கை எச்சரிப்பதை காட்டுகிறது(வ-2), நான் சொல்வதை எல்லாம் மறந்து விட்டு இப்போது நீங்களே இந்த நான்கையும் ஒப்பிட்டு சற்று கற்பனை உலகிற்கு செல்லுங்கள், வார்த்தைகள் ஊமையாகி, அந்த சிற்பியை காதலிக்க துவங்கி விடுவீர்கள், தமிழர்களின் ஆற்றலை உணர்வீர்கள்.


இது ஒன்று தானா, இல்லவே இல்லை, இது போன்று எத்தனை கோயில்களில், எத்தனை சிற்பங்கள் நம்மிடம் பேசிக்கொண்டு தான் இருக்கின்றது, அவைகள் ஒவ்வொன்றும் எதையோ ஒன்றை குறிப்பால் உணர்த்திக்கொண்டு தான் உள்ளது இவற்றை எல்லாம் நாம் கவனிக்கிறோமா ?? இல்லை மாறாக அழிக்கிறோம் !!! அடுத்த முறை கோயில்களுக்கு செல்லும் போது, இது போன்ற சிற்பங்களின் மீது விபூதிகொட்டுவது,அதன் மீது சாய்வது, அவற்றின் மீது பெயர்களை பதிப்பது,அதை சேதப் படுத்துவது போன்ற எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் !!!!.காப்பாற்றுவோம் அழிவிலிருந்து நம் கலைப் பொக்கிஷங்களை.

Saturday, November 24, 2012

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

கல்யாணத்தில் தாலி கட்டும் பொழுது சொல்லும் ஹிந்து சமய திருமண மந்திரத்தின் பொருள் பெரும்பாலனவர்களுக்கு தெரிவதில்லை.
அதன் பொருள் என்னவென்றால்..

about-thaali-hindu-festivals-marriage-photo

''மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!! -என்று புரோகிதர் சொல்வார்,அதாவது..,

மங்கலத்தின் மறு பெயர் கொண்ட மங்கலமான மணப்பெண்ணே, இந்த நொடியிலிரிந்து, உன்னோடு துவங்கும் இல்லற வாழ்வு எனக்கு/நமக்கு மிக நல்ல முறையில் அமைய வேண்டும், நம் ஜீவனம் நன்றாக இருக்க எல்லாம் வல்ல இறைவினடம் மனதார வேண்டி இந்த புனிதமான திருமாங்கல்யச் சரடை உனக்கு அணிவிக்கிறேன். இந்த உலகே மெச்சும் நல்ல துணையாளாக, அணைத்து இன்ப, துன்பங்களிலும், சுக துக்கத்திலும் சரிசமமாக பங்கேற்று, நூறு ஆண்டு காலம் மங்களமாக வாழ்வாயாக. என்பதே இந்த மந்திரத்தின் பொருள். 
நன்றி ! பட்டுக்கோட்டை சுப்பிரமணியன்

கடமையை செய்.. பலனை எதிர்பாராதே...

கீதையின் வரிகள்... கீதை என்ன சொல்கிறது, "பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்து கொண்டே இருக்க வேண்டுமா!"..

அர்த்தம் அதுவல்ல... "ஒரு கடமை முடிந்ததும், பலனை எதிர்பார்க்காமல் அடுத்த கடமை செய்ய துவங்கவேண்டும்.


geetha-saram-in-tamil

மாறாகபலனை எதிர்ப்பார்த்திருந்தால், அடுத்த பணியில் முழு கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். எனவே! நீ செய்த கடமைக்கு பலன் தானாக வந்து சேரும், அதனால் அடுத்த கடமைகளில் கவனம் செலுத்து என்பதை "கடமையை செய்.. பலனை எதிர்பாராதே..." என்று கீதை சொல்கிறது.

இதை நான் ஏன் இன்று சொல்கிறேன்?

முகநூலில் தென்பட்டது "(நவம்பர் 22) தான் கீதை தோன்றுவதற்கு காராணமான பாரத போர் தொடங்கப்பட்டது" என்ற தகவலின் காரணாமாக இன்று சொல்கிறேன்.
நன்றி ! 
sundar Raman

சங்க காலக் கோட்டை

Pudukkottai-tamil-naduபடத்தில் நீங்கள் பார்ப்பது ''கூகிள் மப்'' மூலம் பிடிக்கபட்ட புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள பொப்பண்ண கோட்டையின் புகைப்படம்.

புதுக்கோட்டை கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான கோட்டையின் மதிற்சுவர்களும் மற்ற செங்கற்கட்டுமானங்களுமே
கும். அப்பழைய கோட்டையின் பெயர் பொப்பண்ண கோட்டை என்பதாகும்.

மக்கள் வழக்கில் தற்போது அக்கோட்டை பொற்பனைக் கோட்டை என்று அழைக்கப் பெறுகின்றது. இக்கோட்டையின் மேற்குத் திசையில் அமைந்துள்ள பொப்பண்ண முனீஸ்வரர் என்ற காவல் தெய்வமே தற்போதைய புதுக்கோட்டை நகரத்தவர்க்கு கண்கண்ட காவல் தெய்வமாகும். பொற்பனை ஈஸ்வரன் கோயிலின் பனை மரங்கள் பொன்னால் ஆன காய்களை காய்த்ததாக ஒரு புராணக் கதையைக் கூறி அந்தத் தெய்வத்திற்கு பொற்பனை முனீஸ்வரன் என்றும், அங்குள்ள கோட்டையை பொற்பனைக் கோட்டை என்றும் மக்கள் அழைக்கலாயினர். ஆனால் அந்தக் கோட்டைதான் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார்க்கு சோறிட்டு ஆக்கம் தந்தவர் வாழ்ந்த கோட்டை என்ற செய்தி தமிழ் கூறு நல்லுலகம் அறியாத செய்தியாகும்.

சங்க காலக் கோட்டை

பல நூறு ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியதாய் அமைந்த வட்ட வடிவ மண் கோட்டை, சுற்றிலும் அமைந்த அகழி ஆகியவற்றோடு தற்போது காணப்பெறும் பொப்பண்ண கோட்டை ஏறத்தாழ 50 அடி உயரமும், 50 அடி அகலமும் உடைய மண்மேடுடைய கோட்டையாக விளங்குகிறது. அகலமான இம்மண் கோட்டை மீது செங்கல்லால் அமைந்த நெடுமதில் முன்பு இருந்து காலப் போக்கில் இயற்கையின் சீற்றங்களாலும், மனிதர்களின் தேவையாலும் அழிந்துவிட்டது.

புதுக்கோட்டை நகர நிர்மாணத்திற்கு இக்கோட்டை செங்கற்களையே முழுதும் பயன்படுத்தியுள்ளனர். தற்போது அம்மதிலின் அடித்தளமும், உடைந்த செங்கற் குவியல்களுமே மண்கோட்டை மீது காணப் பெறுகின்றன. இக்கோட்டையின் உள்ளும், புறமும் மண்கோட்டையின் பல இடங்களிலும் இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கருப்பு, சிகப்பு பானை ஓடுகள் மணிகள் போன்ற தொல்லியல் சான்றுகள் மிகுந்து காணப் பெறுகின்றன. அக்காலம் தொடங்கி சுமார் 500 ஆண்டு காலத்திற்கு முன்பு வரை அக்கோட்டையில் தொடர்ந்து குடியிருப்புகள் இருந்துள்ளதற்கான பல்வேறு தொல்லியல் சான்றுகள் இக்கோட்டைப் பகுதி முழுவதும் கிடைக்கின்றன. கோட்டை மீது காணப்பெறும் செங்கற்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கற்கள் என்பதோடு அவை பூம்புகார், உறையூர் ஆகிய பகுதிகளில் அகழ்வாய்வில் கிடைத்த செங்கற்களையே முழுதும் ஒத்து காணப் பெறுகின்றன.

பொப்பண்ண கோட்டையின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கலசக்காடு எனும் ஊர் முற்காலத்தில் கலசமங்கலம் என அழைக்கப் பெற்றது. அங்கு 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூற்றுக் கணக்கான ஈமச் சின்னங்கள் காணப் பெறுகின்றன. கற்பதுக்கை எனப் பெறும் கற்குவியலாக அமைந்த ஈமச் சின்னங்கள், சுற்றிலும் இரு வட்டங்களாக கற்பாறைகள் திகழ நடுவே அமைந்த ஈமப் பேழைகள் என கலசக்காடு முழுவதும் பெருங்கற்கால சான்றுகள் நிறைந்துள்ளன. இவை அனைத்தையும் தொகுத்து நோக்கும் போது தமிழகத்தில் இன்று முழுமையாக (முழுவட்ட வடிவில்) காணப்பெறும் ஒரே சங்ககால கோட்டை இதுவேயாகும்.

விவரிக்க வார்த்தைகள் இல்லை!


arthanareeswarar-tiruchengode
விமானத்தின் கூரையில் எட்டு கிளிகள், எட்டு திக்கும் தலைகீழாக இருப்பது போல் ஒரே கல்லில் வடிக்கப்பட்டு உள்ளது !. . இதன் நடுவே அமைந்துள்ள கல்லினால் ஆன தேங்காயை சுற்றினால் அது சுற்றும், ஆனால் கையில் வராது ! இதுவும் அந்த கல்லில் இணைந்தது தான் !. இந்த சிற்பத்தை சுற்றி அழகிய சிறிய வடிவிலானா சிற்பங்கள் அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றது. அதுவும் அதே கல்லில் தான் , இவற்றை எல்லாம் அலங்கங்கரிக்க ஒரே கல்லினால் செய்யப்பட்ட நான்கு கற்சங்கிலிகள், நான்கு மூலைகளில் தொங்கிக்கொண்டுள்ளது ! மனிதர்கள் தான் செய்தார்களா ?!.

இடம் : அர்த்தனாரீஸ்வரர் கோயில், "திருக்கொடி மாடச் செங்குன்றூர்" ஊர் பெயர் புரியவில்லையா ? ( திருச்செங்கோடு ) நாமக்கல்.
நன்றி ! Sasi Dharan