Friday, December 21, 2012

மாயன் காலண்டர் மர்மம்...


மெல்போர்ன்: மாயன் காலண்டர்படி உலகம் இன்று அழியும் என்றால் அது இன்று இரவு 11.11 மணி்க்கு அழியும் என்று ஒரு புதுத் தகவலை கிளப்பியுள்ளனர். மெக்சிகோவை பூர்வீகமாக கொண்டதாக கூறப்படும் மாயன் இனத்தினர் தான் முதல் மனித நாகரீக இனத்தினர் என்று கூறப்படுகிறது.

mayan calendar 2012 end of world

வானியல் சாஸ்திரம், ஜோதிடத்தில் மிகச் சிறந்து விளங்கிய அவர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே காலண்டரை தயாரித்து பயன்படுத்தி உள்ளனர். இந்த காலண்டர் 5,126 ஆண்டுகளை கொண்டதாக இருந்தது. இந்த காலண்டர் கி.மு. 3,114ல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காலண்டர் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் இன்றுடன் உலகம் அழிந்துவிடும் என்று உலகம் முழுவதும் பல ஆண்டுகளாகவே பேசி வந்தனர்.

 இந்நிலையில் இன்று அந்த 21ம் தேதியும் வந்துவிட்டது. உலகமும் இதுவரை அழியவில்லை. விடியும்போது தான் உலகம் அழியும் என்று ஒரு தத்துவம் தெரிவிக்கிறது.

mayan calendar 2012

அப்படி பார்த்தால் இன்று விடிந்து பல மணிநேரம் ஆகியும் உலகம் அழியவில்லை. ஆனால் மற்றொரு தத்துவமோ உலகம் இரவு நேரத்தில் அதுவும் 11.11 மணிக்கு அழியும் என்று கூறுகிறது.

எனவே, மாயன் காலண்டர்படி உலகம் இன்று அழியுமானால் இன்று இரவு 11.11 மணி்க்கு அழியும் என்று கூறப்படுகிறது. எதுக்கும் ராத்திரி சாப்பாட்டை முடிச்சுட்டு மொட்டை மாடிப் பக்கம் போய் உட்கார்ந்திருவோம். ஒரு வேளை உலகம் அழிஞ்சுதுன்னா வேடிக்கை பார்த்துட்டு மறுபடியும் தூங்கப் போய்டுவோம்.. சரியா?
நன்றி ! oneindia.in

No comments:

Post a Comment